(க.கமலநாதன்)

சட்ட ரீதியில் பதிவு செய்யப்படாத நிலையில் இயங்கிவந்த தீப்பெட்டிகள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிணை சுற்றிவலைத்ததில் 28 ஆயிரத்து 80 தீப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிட்டம்புவை பனாவல பகுதியில் உள்ள தீப்பெட்டி நிறுவனமொன்றே இவ்வாறு தடை செய்யபப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின் 12 (1) இலக்கச் சட்டத்தின் பிரகாரம் தீக்குச்சிகளை தயாரித்து அவற்றை பெட்டிகளில் இட்டு சந்தைப்படும் செயற்பாடுகளுக்கு இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தின் சான்றிதல் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 

எனினும் குறித்த அனுமதியை பெறாமல் தொழிற்சாலை இயங்கி வந்தமையால் குறித்த தொழிற்சாலை முடக்கப்பட்டுள்ளது.