ஒரேயொரு கொமர்ஷல் வெற்றிக்காகக் காத்திருக்கும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனை இயக்குநர்- நடிகர்- அரசியல்வாதி சீமான், இயக்குநர்கள் சரண், கல்யாண் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘எக்கோ’ படத்தை இயக்கிய இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் புதுமுக நடிகை ஜீவிதா, சார்லி, கும்கி அஸ்வின், சரத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ. ஆர். அபிஷேக் இசையமைக்கிறார். சர்வைவல் திரில்லர் ஜேனரில் தயாராகும் திரைப்படத்தை சனா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ்திரையுலகில் அறிமுகமாகி நூறு படங்களுக்கு மேல் நடித்த மாஸ்டர் மகேந்திரன் , 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘விழா ’படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போதிலிருந்து ஒரேயொரு கொமர்ஷல் வெற்றிக்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். சர்வைவல் திரில்லராக தயாராகும் இந்த படம் அவரது ஆசையை பூர்த்திசெய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM