நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் வெளியாகவிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருப்பவர் விஷ்ணு விஷால். இவர் இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அருண் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ என்ற வெற்றிப் படத்தையும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற வெற்றிப் படத்தையும், ஜெய் நடிப்பில் வெளியான ‘லேபிள்’ என்ற இணையத் தொடரையும் இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ராகுல், ரோமியோ பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் பணியாற்றவிருக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வெற்றிகரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குநர் அருண்ராஜா -நடிகர் விஷ்ணு விஷால் -தயாரிப்பாளர் ராகுல் என மூவரும் புதிதாக கூட்டணி அமைத்திருப்பதால், இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM