பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றம்சாட்டப்பட்ட "பொட்டி” நீதிமன்றத்தினால் விடுதலை!

07 Feb, 2024 | 05:12 PM
image

இளம் வயது தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட "பொட்டி” என்ற நபர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இவர் இளம் வயது தாய் ஒருவரிடம் அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி தனது முச்சக்கரவண்டியில் ஏற்றி வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட  இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவருக்கு  8 வருட கால சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 குறித்த பாலியல் துஷ்பிரயோகமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம் இன்றி இடம்பெற முடியாது என கைது செய்யப்பட்டவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39
news-image

தமிழரசுக்கட்சியிடமிருந்து விக்கியை பாதுகாப்பதற்கு இனி யாருமில்லை...

2025-06-13 02:27:14
news-image

காணி  வர்த்தமானி இரத்து குறித்து அமைச்சரவையிடம்...

2025-06-13 01:46:54
news-image

மத்தியவங்கி பிணை மோசடி: கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்க...

2025-06-13 01:42:25