சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

07 Feb, 2024 | 05:30 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சர்ச்சைக்குரிய மத அரசியல் தொடர்பான விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், மக்கள் மதத்தைக் கடந்த ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதையும், மக்களின் கருத்துகளுக்கும், அவர்களின் கருத்துரிமைகளுக்கும் மற்றவர்கள் மதிப்பளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த திரைப்படம் உருவாகியிருப்பதாக படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 

விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிப்பில் தயாராகி, பெப்ரவரி 9 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘லால் சாம்’. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதில் எமோஷனல், காதல், சென்டிமெண்ட், எக்சன், துடுப்பாட்டம், வன்முறை என அனைத்து கொமர்ஷல் அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

படத்தில் நடித்திருக்கும் விக்ராந்த்.. வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசுகையில்,“ சினிமாவுக்கு வந்து பதினைஞ்சி வருசமாயிடிச்சி.. நா நெனச்சா மாதிரி சக்சஸ் பண்ண முடியல. சினிமா போதும்னு முடிவு எடுத்துட்டு வேற சைடுல கவனம் செலுத்தலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ.. ஐஸ்வர்யா மேடம் கால் பண்ணாங்க. அவங்கள மீட் பண்ணேன். நா கேட்ட மொத கேள்வியே வில்லனா நடிக்கணுமா..ன்னு தான். அவங்க இல்லல்லே.ன்னு சொல்லிட்டு, படத்தோட நரேசன சொன்னாங்க. அப்புறம் அப்பாவும் நடிக்குறாங்கன்னு சொன்னாங்க.. அப்ப எம் மனசுக்குள்ள இந்த சினிமா நம்மள கைவிடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். உடனே நா நெனச்சிருந்த அவங்ககிட்ட சொன்னேன். என் கேரியர டர்னிங் பாயிண்ட் இந்த படம் தான்.” என உணர்ச்சியுடன் விவரித்தார்.

கடந்த மாத இறுதியில் வெளியான படம் ‘ப்ளூ ஸ்டார்’. இந்த படம் துடுப்பாட்டத்தையும் பற்றியும், அதில் இடம்பெறும் சாதீய பாகுபாடுகளையும் தோலுரித்திருந்தது. இந்த மாதம் வெளியாகவிருக்கும் ‘லால் சலாம்’ படமும் துடுப்பாட்டத்தை பற்றியதான படம் என்பதும், மத ரீதியிலான பாகுபாட்டை முன்னிறுத்துகிறது என்பதும் தெரியவருகிறது. இதனால் தற்போது தமிழ் ரசிகர்கள் எந்த படைப்பை கண்டு ரசித்தாலும், அதில் மறைமுகமாக சாதி அரசியல், மத அரசியல் இடம்பெறுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. சினிமாவை கடந்த பல தசாப்பதங்களாக சமூக மாற்றத்திற்கான ஊடகமாக படைப்பாளிகள் பயன்படுத்திய நிலையில்.. தற்போதுஅவை வெற்று அரசியல் பிரச்சார தளமாக மாற்றப்பட்டு வருகிறதே..! என பாமர ரசிகர்கள் நிஜமாகவே கவலையடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில்...

2025-11-16 14:29:14
news-image

வெளியுறவு விவகாரங்கள் பற்றி குறிப்பிடும் போது...

2025-11-16 14:30:13
news-image

இந்திய ஆதரவை பயன்படுத்தி ஈழத் தமிழர்...

2025-11-16 13:23:42
news-image

தொழிலதிபரும் சமூக சேவையாளருமான நல்லப்ப ரெட்டியார்...

2025-11-16 14:07:49
news-image

புதையல் தோண்டிய இருவர் கைது

2025-11-16 12:58:27
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

2025-11-16 11:29:24
news-image

லொறியை திருடிச் சென்ற நபரால் நேர்ந்த...

2025-11-16 11:27:02
news-image

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

2025-11-16 11:27:51
news-image

போதைப்பொருள் தடுப்புத் திட்டம் : 1,100...

2025-11-16 10:58:51
news-image

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர...

2025-11-16 10:57:06
news-image

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை...

2025-11-16 10:33:08
news-image

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு :...

2025-11-16 10:26:35