தெரணியகல மாகல பகுதியில்  ஏழு வயது சிறுமி ஒருவரும், வயோதிபர் ஒருவரும் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைதுசெய்யப்பட்ட 19 வயதான பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதிவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் ஆறுவயது சிறுமி, வீட்டில் வசித்த வயோதிபர் மற்றும் சிறுமியின் தயார் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட கூரி யுத தாக்குதல் காரணமாக சிறுமியும் வயோதிபரும் உயிரிழந்தநிலையில், சிறுமியின் தயார் தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த்திருந்ததோடு, தேடிவந்த பிரதான சந்தேகநபரை ஸ்ரீ பாத காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில், கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.