ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

Published By: Digital Desk 3

07 Feb, 2024 | 03:50 PM
image

நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்டு தமிழக பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல்  தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று புதன்கிழமை (6) மாலை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள  தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார்  அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக  இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை  293 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சங்கிரிலா...

2024-04-23 09:51:51
news-image

கலவானையில் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகள்...

2024-04-23 09:28:23