நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

07 Feb, 2024 | 05:28 PM
image

உலகளவில் ஒரு மில்லியன் மக்களின் பத்து நபருக்கு நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய கடுமையான தோல் உரியும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களை அதிகளவில் பாதிப்பதாகவும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் என்பது மிக அரிதாக ஏற்படக்கூடிய பாதிப்பாகும். நாம் உட்கொள்ளும் சில வலி நிவாரணி மருந்துகளின் பக்கவிளைவு காரணமாக தோலில் எதிர்வினை நடைபெற்று, தோல் உரியத் தொடங்கும்.

குறிப்பாக தோலின் மேற்பரப்பு பகுதியில் முப்பது சதவீதற்கும் மேற்பட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, சளி சவ்வு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும்.

தோலில் வலி, தலைவலி, காய்ச்சல், இருமல், கண்கள் எரிச்சல், தோல் பகுதியில் சிவப்பு வண்ணத்தில் வேனற்கட்டிகள் உண்டாகுதல், நாக்கு மற்றும் முகம் வீக்கம், தோலில் உரிதல் நடைபெறுவதால் எரிச்சல், கொப்புளங்கள், வாய், கண்கள் போன்ற பகுதிகளில் புண், வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். 

இதன்போது மருத்துவர்கள் தோல் திசு பரிசோதனை, உரிந்த தோல்கள் ஆகியவற்றை பரிசோதித்து, பாதிப்பின் தன்மைக்கேற்ப நீங்கள் உட்கொண்டிருக்கும் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிப்பார்கள்.

பிறகு பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணமளிப்பார்கள். குறிப்பாக தோலிற்கு ஊட்டச்சத்து வழங்கும் திரவ வடிவிலான சிகிச்சை, நோய் தொற்றை அகற்றுவதற்காக நரம்புகளின் ஊடாக பிரத்யேக மருந்துகளை செலுத்தும் சிகிச்சை, வலி நிவாரணி, கண்ணிற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, சீரான சுவாசத்திற்குரிய பிரத்யேக சிகிச்சை போன்றவற்றை வழங்கி நிவாரணம் அளிப்பர். 

டொக்டர் தீப்தி

தொகுப்பு அனுஷா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருதியில் கல்சியம் அதிகமானால்....

2024-03-01 19:12:25
news-image

மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒட்டோ இம்யூன்...

2024-02-27 15:19:13
news-image

இணைப்பு திசுக்களில் ஏற்படும் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-26 17:08:02
news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05