கச்சதீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர்.
வருடாந்த கச்சதீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சதீவு தீவில் நடைபெற உள்ளது.
பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் போன்ற வேலைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் வண்ண சலவை மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் வளாகத்திற்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடற்படை மேற்கொண்டுள்ளது.
திருவிழாவிற்கு செல்லும் இலங்கை பக்தர்களுக்காக படகு சேவைகள் குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM