கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளதனை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கஞ்சா செடி பயிரிடுவதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது வேறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அமைச்சரவைக்கு எந்த அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM