ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டத்தை கல்வி அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ; எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கால் இறுதிப் போட்டிகள்

07 Feb, 2024 | 01:54 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் 80களின் பழைய மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ள 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் நொக் அவுட் கால்பந்தாட்டத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயன்த பிரதம அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்ற ஆரம்ப விழாவின்போது போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்தை கல்வி அமைச்சர் திரை நீக்கம் செய்துவைத்தார்.

அத்துடன் போட்டிக்கான நிவியா பந்தும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

ஆரம்ப விழாவில் கல்லூரி அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிப் உர் ரஹ்மான், போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்கும் ஒக்ஸ்போர்ட் குழுமத்தின் பணிப்பாளர்கள் இம்தியாஸ் பாறூக் மற்றும் ஹிபாஸ் பாறூக், நிவியா பந்துகளை அன்பளிப்பு செய்த தொழிலதிபர்களான எச்.எம்.எம். ஹனிபா  காதர் மற்றும் மொஹைதீன் நூஹு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டத்தில் தகுதிகாண் சுற்று, முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் யாவும் திங்கட்கிழமையுடன் (05) நிறைவடைந்தன.

முன்னோடி கால் இறுதிப் போட்டிகள்

கொழும்பு சுகததாச அரங்கில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய மூன்று தினங்களில் முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

கடந்த சனிக்கிழமை ஆரம்ப விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் மாவனெல்லை பதுரியா கல்லூரியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியனும் வரவேற்பு கல்லூரியுமான ஹமீத் அல் ஹுசெய்னி 6 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

எவ்வாறாயினும் நீர்கொழும்பு சென். மேரிஸ் கல்லூரியே முன்னோடி கால் இறுதிப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது.

மாளிகாவத்தை அல் முபாரக் கல்லூரியுடனான போட்டியில் சென். மேரிஸ் கல்லூரி 7 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இரண்டாவது பெரிய வெற்றியை றோயல் கல்லூரி பதிவுசெய்தது.

தாருஸலாம் கல்லூரியை எதிர்கொண்ட றோயல் கல்லூரி 6 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வெஸ்லியுடனான போட்டியில் கேட்வே கல்லூரியும் (4 - 0), ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியுடனான போட்டியில் அல் ஹிலால் மத்திய கல்லூரியும் (2 - 0), பதுளை தர்மதூத்த கல்லூரியுடனான போட்டியில் சென். பெனடிக்ட்ஸ் கல்லூரியும் (4 - 0), இஸிபத்தன கல்லூரியுடனான போட்டியில் சென் ஜோசப்ஸ் கல்லூரியும் (4 - 0) வெற்றிபெற்றன.

கல்கிஸ்ஸை சென் தோமசஸ் கல்லூரிக்கும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கும் இடையிலான போட்டி 2 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் சென். தோமசஸ் 3 - 1 என வெற்றிபெற்றது.

இந்தப் போட்டிகளில் விளையாடியவர்களில் குறைந்தது 40க்கும் மேற்பட்ட மாணவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்கள் மிக உயரிய நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த மாணவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியையும் அதன் 80களின் பழைய மாணவர்கள் குழுவையுமே சாருகிறது.

கால் இறுதிப் போட்டிகள்

முன்னோடி கால் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

கால் இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெறவுள்ளன.

றோயல் கல்லூரிக்கும் கேட்வே சர்வதேச பாடசாலைக்கும் இடையிலான போட்டி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து சென். பெனடிக்ட்ஸ் கல்லூரிக்கும் சென் தோமசஸ் கல்லூரிக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரிக்கும் நீர்கொழும்பு அல் ஹிலால் கல்லூரிக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். அப் போட்டி முடிவடைந்தவுடன் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியை சென் ஜோசப்ஸ் கல்லூரி எதிர்த்தாடும்.

அரை இறுதிப் போட்டிகளை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பில்லி ஜீன் கிங் கிண்ண மகளிர்...

2025-06-20 20:44:06
news-image

ஒன்லைனில் இலங்கை - பங்களாதேஷ் மட்டுப்படுத்தப்பட்ட...

2025-06-20 19:59:25
news-image

கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ...

2025-06-20 19:55:59
news-image

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல்...

2025-06-20 13:21:50
news-image

நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை...

2025-06-20 12:34:21
news-image

பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன்...

2025-06-19 20:53:21
news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 21:34:57
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08
news-image

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு லங்கா...

2025-06-18 14:14:33
news-image

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

2025-06-18 12:26:58