கலாநிதி அன்ஸாரின் தலைமையிலான விருது' விழாவில் பரத நாட்டியத்துக்கு முன்னுரிமை : 100 பேருக்கு விருதுகள் 

06 Feb, 2024 | 01:36 PM
image

சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர் கலாநிதி அஹமட் லெப்பை அன்ஸார் தலைமையில், லக்ஸ்டோ மீடியா ஊடக வலையமைப்பின் திறமைக்கான தேடல் விருது விழாவின் 27ஆவது வருட நிறைவு வைபவம் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை (3) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மேடையேற்றப்பட்ட பரத நாட்டியத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டமை முக்கிய விடயமாக பலரால் கருதப்படுகிறது.  

தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் ஒன்றித்துள்ள பரத நாட்டியத்தை இழிவுபடுத்தி, அக்கரைப்பற்றை சேர்ந்த மௌலவி ஒருவர் கடந்த வருட இறுதியில் முகநூலில் வெறுப்பூட்டல் பிரசாரம்  மேற்கொண்டிருந்தார். இது அதீத சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தமிழர்களை பெரிதும் காயப்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னர், பல்வேறு கண்டன அறிக்கைகள், எதிர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு, முஸ்லிம் புத்திஜீவிகள், இஸ்லாமிய அமைப்புகள் கூட மௌலவியை கண்டித்தன.

இந்நிலையில் குறித்த விருது விழாவில் இடம்பெற்ற பரதநாட்டியம் நிகழ்வுகள் பலரது கவனத்துக்கு திரும்பியுள்ளது.

குறிப்பாக, இதில் பங்குபற்ற யாழ்ப்பாணத்தில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த விருது விழாவில் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பல்துறை கலைஞர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது 100 கலைஞர்களுக்கு துறை சார்ந்த விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் பேசும் மக்களிடையே கலாசார உறவுப் பாலமாக இவ்விழா பரிணமித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32