இன்றைய திகதியில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இதனை கட்டுக்குள் வைத்திருப்பதில் அலட்சியம் காட்டுவார்கள். அவர்களுள் சிலர் டயாபடீக் நியுரோபதி என்னும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இவர்களுக்கு வரக்கூடிய, நரம்பு தொடர்பான பிரச்னையே டயாபடீக் நியுரோபதி என்று குறிப்பிடுகிறார்கள். நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது, நரம்பு இழைகள் மற்றும் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அது நரம்புகளின் தகவல் பரிமாற்ற பணியில் இடையூறை விளைவிக்கிறது. ஒரு சிலருக்கு இதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி உடலில் தங்கும் நச்சுக்களால் தான் நரம்புகள் பாதிப்படைகின்றன. இதில் பெரி பெரல் நியுரோபதி, ஆடாடானமிக் நியுரோபதி, பராக்சிமல் நியுரோபதி, போகல் நியுரோபதி என நான்கு வகைகள் உள்ளன.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும், காலில் ஏதாவது பொருள் குத்தினால் கூட உணர்வு இருக்காது, வலிக்காது, இது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு காலில் புண் கூட வருவதற்கு வாய்ப்புண்டு.
இதன் போது நரம்புகள் பாதிக்கப்படுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் கூட, இவர்களால் கண்டறிய முடியாது. வராமல் தடுப்பதை தள்ளிப் போடலாமே தவிர, தடுக்க வழியில்லை. மது, புகை பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தகுந்த சிகிச்சையாக கருதப்படுகிறது.
டயாபடீக் நியுரோபதியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவர்கள், வெள்ளை நிற உணவுகளான அரிசி, மைதா, சர்க்கரை இவற்றை தவிர்க்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையிலான உணவுகளை நாளாந்தம் தவறாமல் சமச்சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தினமும் உடற்பயிற்சியும் அவசியம். மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளையும் சாப்பிடவேண்டும்.
டொக்டர் பரணீதரன்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM