எனது வாழ்க்கையில் முக்கிய நபர் என் அக்கா : கொழும்பு இசை நிகழ்ச்சி அனைவருக்கும் புதுமையை அளிக்கும் - யுவன்

Published By: Priyatharshan

06 Feb, 2024 | 11:51 AM
image

எனது இசைத் துறையிலோ சரி, என்னுடைய வாழ்க்கையிலோ சரி மிகவும் முக்கியமான ஒரு நபர் எனது அக்கா. நான் இலங்கைக்கு வந்துள்ளதை எண்ணி சந்தோசமடைகின்றேன். கொழும்பு இசை நிகழ்ச்சி அனைவருக்கும் புதுமையை அளிக்கும் என்று நினைக்கின்றேன் என தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்வு இம்மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR & FC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

2024 U1's LONG DRIVE WORLD TOUR இன் முதல் இசை நிகழ்வு இலங்கையில்  U1's Long Drive To Colombo 2024 என்ற பெயரில் இடம்பெறுகின்றது.

இலங்கையில் இதுவரையில் இடம்பெறாத அளவில் மிகவும் பிரம்மாண்டமன முறையில் யுவனின் இந்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்த இசை நிகழ்வு 24 ஆயிரம் ரசிகர்களை உள்ளடக்கிய பெரும் நிகழ்வாக இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஹரிச்சரண், அண்ரியா, பிரேம்ஜி, ராகுல்நம்பியார், நித்தியஸ்ரீ, திவாகர், ருக்சா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

ஒரு மைல்கல்லாக இடம்பெறும் இந்த இசை நிகழ்வை ஆரா என்டடைன்மன்ட் மற்றும் சதீஸ் ஜூவல்லரி ஆகியன இணைந்து வழங்குகின்றன.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு தாமரைக் கோபுரத்திலுள்ள Cosmic வரவேற்பு மண்டபத்தில் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. 

இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேரடியாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆரம்பத்தில் பேசிய யுவன், 

அனைவருக்கும் வணக்கம், எனது சகோதரி இலங்கையில் காலமாகியிருந்தார். இங்கிருந்து அவரது உடலை சென்னைக்கு கொண்டுச் செல்வதற்கு ஆரா நிறுவனத்தின் ஆனந்தன் மற்றும் சதீஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் சதாசிவம் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். அதற்கு நான் நன்றியை கூறுகின்றேன். இலங்கை அரசாங்கம் மற்றும் இங்குள்ள அனைவரும் உதவி புரிந்தனர். அமைச்சர் ஜீவன் தொண்டமானும் உதவி புரிந்தார். 

சகோதரியின் இழப்பையடுத்து இந்த இசை நிகழ்ச்சியை தள்ளிவைப்பதா நிறுத்துவதா என்று நினைத்திருந்தேன். ஆனாலும் குறித்த திகதியிலேயே ஊடகவியலாளர் சந்திப்பையும் நிகழ்ச்சியும் நடத்தும் படி கேட்டிருந்தேன். இதைத் தான் நான் உங்களிடம் அன்பை பரிமாறிக்கொள்ளும் விடயமாக நினைக்கின்றேன். நான் இங்கு வந்துள்ளமையை நினைத்து சந்தோசமடைகின்றேன். கொழும்பு இசை நிகழ்ச்சி அனைவருக்கும் புதுமையை அளிக்கும் என்று நினைக்கின்றேன்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யுவன்,

சகோதரியின் பாடல்களும் இந்த இசை நிகழ்வில் இடம்பெறும். ஏனெனில் எனக்கு 6 வயதாக இருக்கும் போது முதலில் எனது கையைப் பிடித்து இசையை கற்றுக்கொடுத்தது எனது அக்கா தான்.  

என்னை வற்புறுத்தி அவருடைய பியானோ வகுப்புக்கு கூட்டிச் சென்றதும் என்னுடைய அக்கா தான். எனது இசைத் துறையிலோ சரி, என்னுடைய வாழ்க்கையிலோ சரி மிகவும் முக்கியமான ஒரு நபர் எனது அக்கா. கண்டிப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் அக்காவினுடைய பாடல்களும் இடம்பெறும். 

2024 U1's LONG DRIVE WORLD TOUR முதல் இசை நிகழ்ச்சையை இலங்கையில் நடத்துவதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கை மற்றும் இங்குள்ள மக்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.  

இலங்கையில் இசை நிகழ்ச்சியை நடத்துமாறு கேட்டதுமே நான் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டேன். இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் வித்தியாசமான இசை நுட்பங்களை பயன்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளோன். 

இந்த 2024 U1's LONG DRIVE WORLD TOUR இன் அடுத்த இசை நிகழ்ச்சிகைளை பெங்களூர், சென்னை, ஐரோப்பா போன்ற பல நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

( படங்கள் : ஜே. சுஜீவகுமார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32