கொமடி நடிகராக வெற்றி பெற்ற நடிகர் சதீஷ், ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ எனும் கொமடி ஹாரர் படம் ஹிட்டானது. இந்நிலையில் சதீஷின் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வித்தைக்காரன்’ படம் இம்மாதம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் தயாரான திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்ரமணி சிவா, பவெல் நவகீதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வைட் கொர்பெட் பிலிம்ஸ் சார்பில் கே. ராஜபாண்டி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் படக்குழுவினர் இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதியன்று வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்கள்.
சதீஷின் நடிப்பில் இதற்கு முன் வெளியான ‘கன்ஜுரிங் கண்ணப்பன்’ படமாளிகைகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. அதேப் போல் ‘வித்தைக்காரன்’ படமும் வெற்றிப் பெறும் என எதிர்பார்ப்படுகிறது. இந்த படம் வெற்றிப்பெற்றால் சதீஷ் கதாநாயனாக வெற்றிப் பெற்றுவிடுவார் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM