பேஜெட் டிஸீஸ் எனப்படும் எலும்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை

05 Feb, 2024 | 09:13 PM
image

நாற்பது வயதிற்கு மேற்பட்ட லட்சம் நபரில் பத்து பேருக்கு பேஜெட் டிஸீஸ் எனப்படும் எலும்பு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் இதுவரை ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த பாதிப்பு மரபு வழி மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. எலும்பின் வளர்ச்சியின் போது ஏற்படும் சமச்சீரற்றத்தன்மை காரணமாக, ஆரோக்கியமற்ற முறையில் எலும்பு உருவாவதை இது குறிக்கிறது. இதனால் எலும்பு முறிவடைவதற்கும், சமநிலையற்ற எலும்பு உருவாவதற்கும் காரணமாகிறது.

சிலருக்கு அசாதாரணமான முறையில் எலும்பு வளர்ச்சியடைந்து இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் உங்களின் உடலில் ஏற்படும் இயல்பான மறுசுழற்சியின் போது, புதிய எலும்பு திசு படிப்படியாக உருவாகி, பழைய எலும்பு திசுவினை மாற்றியமைக்கிறது.

இதனால் மண்டையோடு, இடுப்பு, கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளிலுள்ள எலும்புகள் பலவீனமடைவதற்கும், அவை எதிர்பாராமல் முறிவதற்கும் காரணமாகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அவர்களுக்கு குணமாகும் காலகட்டம் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

மூட்டு வலி, எலும்பில் வலி, தோலில் நிறமாற்றம், மூட்டுகள் வீக்கம், இடுப்பு வலி, முதுகெலும்பு பகுதியிலுள்ள நரம்புகளில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல், பசியின்மை காது கேளாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே எலும்பு மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். 

இதன் போது பிரத்யேக இரத்த பரிசோதனை, எக்ஸ் ரே, போன் ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியத்தை துல்லியமாக அவதானிப்பர். 

பிரத்யேக மருந்தியல் சிகிச்சையின் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை அளிப்பர். பிறகு சத்திர சிகிச்சைகளின் மூலம் முறிவடைந்திருக்கும் எலும்பை சீராக்குவர். சிலருக்கு பாதிப்பட்டிற்கும் எலும்புகள், மூட்டுகளில் மாற்று சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவர்.  சிலருக்கு முதுகெலும்பு பகுதியிலுள்ள எலும்புளுடன் தொடர்புடைய நரம்புகளில் உண்டாகியிருக்கும் அழுத்தத்தை பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவர். 

டொக்டர் ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49