அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெய்வ திருவுருவங்கள்

05 Feb, 2024 | 05:10 PM
image

ற்காலத்தில் எம்முடைய இல்லங்களில் (வாடகை வீடாக இருந்தாலோ அல்லது சொந்த வீடாக இருந்தாலோ) உள்ள பூஜையறையில் ஏராளமான சுவாமிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். சிலர் யாரேனும் புனித யாத்திரை சென்றுவிட்டு, அந்த தலத்து இறைவனின் பொக்கட் சைஸ் புகைப்படத்தை பரிசாக அளித்திருப்பார்கள். அதையும் நாம் எம்முடைய பூஜையறையில் இடம்பெற வைத்திருப்போம். ஏற்கனவே எம்முடைய பூஜையறையில் குலதெய்வம், இஷ்ட தெய்வம் போன்ற தெய்வங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். 

இன்றைய சூழலில் டிரெண்டிங்கில் இருக்கும் சாய்பாபா மற்றும் கணக்கம்பட்டி சித்தர் ஆகியோரின் புகைப்படத்தையும் வைத்திருப்போம். ஆனால், எம்முடைய பூஜையறையில் தெய்வங்களின் எத்தனை புகைப்படங்கள் இருந்தாலும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தெய்வ திருவுருவங்களின் புகைப்படங்கள் எது என்பது தெரியாதிருக்கும். 

இதனால் எம்முடைய முன்னோர்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்னகாரர்கள் தங்களுடைய பூஜையறையில் அவர்களின் விருப்பத்துக்குரிய தெய்வ திருவுருவங்களின் புகைப்படங்கள், சிறிய அளவிலான சிலைகள் இருந்தாலும், அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தெய்வங்களின் திருவுருவ புகைப்படத்தைப் பற்றிய விபரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். 

இத்தகைய தெய்வ திருவுருவ புகைப்படத்தை இடம்பெறச் செய்தால், உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் காரணமாக குன்றா வளத்துடன் நீடித்த மகிழ்ச்சியுடன் வாழ்வீர்.

மேஷ லக்னம்

திருவண்ணாமலை சிவபெருமான், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீமகாலட்சுமி ஆகியோரின் புகைப்படங்களை வைத்துக்கொள்ளலாம். 

ரிஷப லக்னம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படம், நின்ற நிலையிலுள்ள பெருமாள், (உதாரணத்துக்கு திருப்பதி ஏழுமலையான்) பழனி முருகனின் இராஜ அலங்காரத்துடன் இருக்கும் புகைப்படம், உங்களுடைய காவல் தெய்வ புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம். 

மிதுன லக்னம்

குடத்துடன் இருக்கக்கூடிய மகாலட்சுமி, சாந்த சொரூபத்துடன் இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், பழமுதிர்ச்சோலை முருகன், மதுரை கள்ளழகர், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் ஆகியோரின் புகைப்படத்தை வைத்துக்கொள்ளலாம். 

கடக லக்னம்

மகான்கள், ஜீவசமாதியடைந்த சித்தர்களின் புகைப்படங்கள். (மகா பெரியவர், கணக்கம்பட்டி சித்தர்) திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சியம்மன் ஆகிய தெய்வங்களின் திருவுருவப் படத்தை வைத்துக்கொள்ளலாம்.

சிம்ம லக்னம்

ஸ்ரீராமசந்திர மூர்த்தி, பகவத் கீதை, திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாரின் அலங்கார புகைப்படம், ஸ்ரீ ராகவேந்திராவின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம். 

கன்னி லக்னம்

ஸ்ரீமகாலட்சுமி, பூஜையறையில் சுவாமி பாடல் ஒலிப்பது, குல தெய்வம், குடும்ப சகிதமாக இருக்கும் கிருஷ்ணனின் புகைப்படம் ஆகியவற்றை இடம்பெறச் செய்யலாம். 

துலாம் லக்னம்

குருவாயூரப்பன், நீர்நிலைகளுடன் கூடிய சுவாமியின் திருவுருவம், அதாவது கடலலையுடன் கூடிய திருச்செந்தூர் முருகன்,  கும்பகோணத்திலிருந்து அருள்பாலிக்கும் ஆனைத்து ஆலயங்களின் சுவாமிகளது புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமக குளத்துடன் இருக்கும் சுவாமிகளின் புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம். 

விருச்சிக லக்னம்

திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், மகா பெரியவர் ஆகியோரின் திருவுருவப் படத்தை வைத்துக்கொள்ளலாம். 

தனுசு லக்னம்

சிவபெருமானின் எந்த வடிவத்தையும் வைத்துக்கொள்ளலாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்க புகைப்படத்தையும், பதினெட்டு சித்தர்கள் உள்ள புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம். 

மகர லக்னம்

பெருமாள் மற்றும் மகாலட்சுமியுடன் கூடிய புகைப்படம், அஷ்டலட்சுமி மற்றும் காஞ்சி காமாட்சியம்மனின் புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம்.

கும்ப லக்னம்

காசி விஸ்வநாதர், காசி தீர்த்தம், இராமேஸ்வர தீர்த்தம் என ஏதேனும் புனித தீர்த்தத்தை பூஜையறையில் வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். 

மீன லக்னம்

பகவதியம்மன், (சோட்டாணிக்கரை, மண்டைக்காடு) தாய் மூகாம்பிகை, காமாட்சியம்மன், விசாலாட்சி அம்மன் என ஏதேனும் ஒரு அம்மனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மேலும் இந்த புகைப்படத்தை பூஜையறையில் வைத்து வணங்குவது தான் சிறப்பு. இதனை பொக்கெட் அளவு புகைப்படமாக உங்களது பையில் வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்பதை உங்களின் சோதிடரை அணுகி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 

தகவல் : ஜோதிலிங்கம்

தொகுப்பு : சுபயோகதாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37
news-image

பாவங்கள் நீக்குவதற்கான எளிய வழிமுறை..!?

2025-01-22 17:24:15
news-image

உங்களுக்கு கூர்ம யோகம் இருக்கிறதா..!?

2025-01-21 15:49:42
news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11