கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லையென கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சந்திப்புக்கு அரசாங்கம் இடம் வழங்கவில்லையெனவும் இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் தங்களது ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுத்துள்ளனர்.