நீலையூர் சுதா எழுதிய 'கொத்துவேலி' கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் புதன்கிழமை (07) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எழுத்தாளரும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமான ச.நவநீதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், வரவேற்புரையை எண்ணம் போல்வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவர் எழுத்தாளர் கனகதீபகாந்தனும், நூலாசிரியர் குறித்து சமூக சேவை திணைக்கள மாகாண பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும், சிறப்பு நயவுரையினை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா. இரத்தினசிங்கமும் வழங்குவார்கள்.
எண்ணம்போல் வாழ்க்கை இலக்கிய மன்றத்தின் ஒருங்கமைப்பில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் எழுத்தாளருமான சூ.பார்த்தீபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இந்நிகழ்வில் பிரதம செயலாளர், அரசாங்க அதிபர், அனைத்து கிழக்கு மாகாண சபைச் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், திருமலை வளாக முதல்வர் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM