"காஷ்மீர் நட்புறவு தினம்" கொழும்பில் அனுஷ்டிப்பு

05 Feb, 2024 | 04:08 PM
image

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், "காஷ்மீர் நட்புறவு தினத்தை" முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த விழாவில் பல வெளிநாட்டுத் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், காஷ்மீர் நலன்விரும்பிகள் மற்றும் இலங்கை ஊடக பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாக பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் காஷ்மீர் நட்புறவு தின செய்திகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக இணைப்பாளரால் முறையே வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களாக ஷிராஸ் யூனாஸ், பொருளாதார அபிவிருத்தி ஆலோசனைக் குழுவின் சபை உறுப்பினர் திருமதி சூரியா ரிஸ்வி, செயலாளர் இளம் முஸ்லிம் பெண்கள் சங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

பயனுள்ள உரையாடல் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வினை வலியுறுத்திய அனைத்து பேச்சாளர்களும் சமய நல்லிணக்கம் மற்றும் அனைவரினதும் அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். 

மேலும், இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமியக் குடியரசின் பதில் உயர்ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷேமியின் சொற்பொழிவுடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த அவர், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று எப்போதும் துணை நிற்போம் என்ற பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் உறுதிப்பாட்டினை வலியுறுத்தினார். 

மேலும், அவர் "இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய துருப்புக்களின் கொடூரமான வன்முறைக்கு உட்பட்டுள்ளது என்றும், இந்த மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் இதுவாகும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சினை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் அதன் சொந்த தீர்மானங்களை செயற்படுத்தி பேரழிவினை தடுக்க வேண்டும். 

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் இந்திய அரசின் மிருகத்தனமான செயல்களால் காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது" என்றார். 

அத்தோடு, முக்கிய பேச்சாளர்களுக்கு பதில் உயர்ஸ்தானிகர் தனது நன்றியினை தெரிவித்தார்.

இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை சித்திரிக்கும் படங்கள் இந்நிகழ்வின் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு, இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரின் அழகிய பிரதேசங்கள் மற்றும் இந்திய படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும் டிஜிட்டல் வீடியோக்களும் இந்நிகழ்வின்போது காண்பிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16
news-image

நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா...

2024-02-28 20:42:46
news-image

மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச...

2024-02-28 14:42:38
news-image

IDM Nations Campus அனுரசணையில் கொழும்பில்...

2024-02-28 15:36:32