அனுராதபுர பகுதியில் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 தெருநாய்கள் இருப்பதாக அநுராதபுரம் மாநகர சபை தெரிவித்துள்ளது .
இந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து காணப்படுவதற்கு பல காரணிகள் இருப்பதாக மாநகர சபையின் மாநகர கால்நடை வைத்திய அதிகாரி பிரதீப் நந்ததாச தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை நாய்களின் இனப்பெருக்கம் செய்வதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
நீர் வெறுப்பு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அநுராதபுரம் நகரசபையானது, மாநக ரசபை பகுதியிலும், மாநகரசபை எல்லைக்குள்ளும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு நிறுவனங்கள் அநுராதபுரம் மாநகரசபையுடன் இணைந்து செயற்படுகின்றன.
அநுராதபுரம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுவதுடன் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு (2023) இந்த திட்டம் 40 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் 40 நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
அதன்படி இன்று 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM