கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முற்பட்ட போது இரு சந்தேக நபர்களில் ஒருவர் மற்றுமொரு சந்தேக நபரை தாக்கி கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச் சென்றவர் களுத்துறை - அளுத்கம பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டு சம்பவம் தொடர்பில் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து இவரை கைது செய்த பொலிஸார் மற்றுமொரு சந்தேக நபருடன் கைவிலங்கிட்டு அளுத்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரின் பாதுகாப்பில் ஜீப் ரக வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் நீதிமன்ற வளாகத்தில் ஜீப்பில் இருந்து இறக்க முற்பட்டபோது குறித்த சந்தேக நபர் மற்றுமொரு சந்தேக நபரை தாக்கி கைவிலங்குகளை கழற்றி ஜீப்பில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது அவர்களை அழைத்துச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , நீதிமன்றில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் சந்தேக நபரை துரத்திச் சென்ற போதும் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM