கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு 7 ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம். இந்த வாய்ப்பினூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.
திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டியான சந்தைக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கு என்றார்.
இந்நிகழ்வுக்கு பல பிரதேசங்களில் இருந்து பலர் வருகை தந்திருந்ததுடன் சிறுமுயற்சியாளர்கள் தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM