வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ஹட்டன் பொலிஸார் வீடொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேச வீடொன்றிலிருந்து நேற்று இரவு இரண்டு லட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களை கைப்பற்றியதுடன், சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடி வந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை  பொலிஸ் குழுவினரின் திடீர் சுற்றிவளைப்பிளை மேற்கொண்டு கைதுசெய்துள்ளனர்.

 வீடொன்றிலிருந்து தொலைக்காட்சி உட்பட மின் உபகரணங்கள், அரிசி மற்றும் சமையல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.