(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை இலங்கையின் அறிமுக ஆட்டக்காரர் சாமிக்க குணசேகரவின் தலைக்கவசத்தை நவீத் சத்ரான் வீசிய பந்து தாக்கியதால் அவர் உபாதைக்குள்ளாகி பின்னர் கட்டாய ஓய்வு பெற நேரிட்டது.
அவருக்குப் பதிலாக மூளை அதிர்ச்சி மாற்று வீரராக கசுன் ராஜித்த உடனடியாக அணியில் இணைக்கப்பட்டார். ஆனால் அவர் துடுப்பெடுத்தாடாத போதிலும் ஆப்கானிஸ்தானின் 2ஆவது இன்னிங்ஸில் பந்துவீசினார்.
24 வயதான இளம் வீரர் சாமிக்க குணசேகரவுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் பின்னர் மேலதிக வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அணியின் முகாமையாளர் தெரிவித்தார்.
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது 107ஆவது ஓவரில் நவீத் ஸத்ரான் வீசிய பவுன்சர் பந்து குணசேகரவின் தலைக்கவசத்தைத் தாக்கியது. அவரது தலைக்கவசத்தைத் தாக்கிய பந்து விக்கெட் காப்பாளருக்கு மேலாக சென்று பவுண்டறியைக் கடந்தது.
இதனிடையே குணசேகரவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதா என பரிசோதிக்கப்பட்டது. ஆனால். அவ்வேளையில் அவர் அவ்வளவாக அதிர்ச்சிக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து குணசேகர தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால், 3 ஓவர்கள் கழித்து குணசேகர திணறலுக்கு உள்ளானார். அப்போது மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதிக்க மைதானத்திற்குள் சென்றபோது குணசேகர கடும் வலியால் தலையைப் பிடித்துக்கொண்டார். இதனை அடுத்து அவர் உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM