(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சீன வம்சாவளியினர் 278 பேர் வாழ்ந்து வருவதாக தெரிவித்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, தங்களது கலாசார தனித்துவங்களையும், பாரம்பரிய மரபுகளையும் பேணி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்கின்ற சீன வம்சாவளியினர் எண்ணிக்கை, அவர்கள் வசிக்கின்ற கிராம சேவகர் பிரிவுகள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப்பதிலளிக்கையிலேயே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது பதிலில் மேலும் தெரிவித்ததாவது,
கொழும்பு, திம்பிரிகஸ்யாய, பாதுக்கை, தெஹிவளை, கடுவலை, மொறட்டுவை, மகரகமை, கஸ்பாவ, ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, இரத்மலானை, சீத்தாவக்கை, கொலன்னாவை ஆகிய 13 பிரதேசங்களில் 39இற்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 278 சீன வம்சாவளியினர் வாழ்கின்றனர். இது தவிர வேறு பிரதேசங்களிலும் இவர்கள் வாழ்வதாக அறியக்கிடைத்துள்ளது.
இவர்கள் இலங்கை குடியுரிமைப் பெற்றிருந்தால் கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட இலங்கையருக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் வழங்கப்படும்.
மேற்படி மக்களின் காலாசார தனித்துவங்களையும், பாரம்பரிய மரபுகளையும் பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றது. பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து அரச அனுசரணைகளும் அவர்களுக்கும் வழங்கப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM