சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் - பேராதனை பல்கலைக்கழகம் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

04 Feb, 2024 | 11:48 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, தொழிற்றுறை திறன் விருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக சாவகச்சேரியை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாநிதி சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானியான கலாநிதி சிவா சிவநாதன் நாளை (05) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது யாழ். இந்து கல்லூரிக்கும், யாழ். வேம்படி மகளிர் உயர்தர கல்லூரிக்கும்  ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் போர்ட்  என்பவற்றுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையில் பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்டிம் கல்வி முறைமை' மேலும் விரிவுபடுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சரின் கோரிக்கைக்கமைய விஞ்ஞானி சிவா சிவநாதன் தனது ஒத்துழைப்புக்களை வழங்குகிறார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாநிதி சிவா சிவநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிகாகோ இலிநொய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய பேராதனை பல்கலைக்கழகம் கால்நடை வைத்தியம், விலங்கு உணவு, கால்நடை சத்திர சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பரிமாற்றிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் கோரிக்கைக்கமைய இலங்கையின் கல்வி, உயர்கல்வி, தொழிற்றுறை திறன் விருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக கலாநிதி சிவா சிவநாதன் எதிர்வரும் காலங்களில் பல செயற்திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32