மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

By Raam

07 Jan, 2016 | 11:41 AM
image

மேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்­கி­ வருவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர்.

சிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த சார­தி­யற்ற கார்­களை உரு­வாக்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­க­ளா­னது ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள தீவி­ர­வா­தி­களின் முகாம்­க­ளுக்கு கடத்­தப்­பட்ட பின்னர், அவற்­றி­லுள்ள அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றி அவர்­களும் தமக்­கென சொந்தக் கார் குண்­டு­களை தயா­ரிக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் பயிற்சி போத­னை­களை வெளிப்­ப­டுத்தும் 8 மணி நேர காணொளிக் காட்­சிகளில் தீவி­ர­வா­தி­களின் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்திப் பிரிவால் தயா­ரிக்­கப்­பட்ட தாக்­குதல் சாத­னங்கள் காண்­பிக்­கப்­பட்­டன.

அத்­துடன் தீவி­ர­வா­திகள் பய­ணிகள் ஜெட் விமா­னங்­களைத் தாக்கக் கூடிய புதிய தொழில்­நுட்­பங்­க­ளையும் விருத்தி செய்யும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மேற்­படி காணொளிக் காட்­சியில் சார­தி­யற்று செலுத்­தப்­படக் கூடிய கார் உரிய இலக்கை நோக்கிச் சென்று எவ்­வாறு பாரிய சேதத்தை விளை­விக்கும் என்­பது உயர் தரா­த­ரத்­துடன் பட­மாக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான மேஜர் கிறிஸ் ஹன்டர் தெரி­வித்­துள்ளார்.

இந்தக் காணொளிக் காட்சி பெரிதும் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ள­தாக அவர் கூறி னார். மேலும் அந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரையிலிருந்து வானுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான பற்றறிகளை தயாரிப்பதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29