சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் பிரத்யேக போஸ்டர் வெளியீடு

03 Feb, 2024 | 04:18 PM
image

தமிழ் திரையுலகில் நாற்பது வயதைக் கடந்த பிறகும் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழும் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் புதிய போஸ்டரை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் ‘எஸ்டிஆர் 48’ என தற்காகலிமாகப் பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘பத்து தல’ படத்திற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழுவினர் அவர் தோன்றும் போஸ்டரை வெளியிட்டு, அவருடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்திருக்கிறார்கள். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்கள் ‘உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போஸ்டரில் சிலம்பரசனின் தோற்றம் இந்த படத்தின் கதை சரித்திர காலகட்டத்துடன் தொடர்புடையாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் இரண்டு  சிலம்பரசன் தோன்றுவதால் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கக்கூடும் என்றும்தெரியவருகிறது. இந்த பிரத்யேக போஸ்டரை சிலம்பரசனின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்...

2025-02-13 17:37:33
news-image

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி...

2025-02-13 17:36:57
news-image

மீண்டும் நடிக்கும் 'காதல் ஓவியம்' புகழ்...

2025-02-13 15:52:49
news-image

கவனம் ஈர்க்கும் ராம் கோபால் வர்மாவின்...

2025-02-13 15:42:51
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14