பெப்ரவரி மாதம் என்பதாலும், இந்த மாதத்தில் தான் இளைய தலைமுறையினர் உற்சாகத்துடன் கொண்டாடும் காதலர் தினம் வருவதாலும், காதலர்களுக்கிடையே ஏற்படும் பிரேக் அப்பிற்கும், அதன் பிறகான வருத்தம் தரக்கூடிய சூழலை எதிர்கொள்வதற்குமான சோதிட ரீதியிலான பரிகாரங்களைக் காணலாம்.
இன்றைய திகதியில் உயர்கல்வி கற்கத் தொடங்குவதற்கு முன்னரே வளரிளம் பருவத்தினர் காதலில் விழுந்துவிடுகின்றனர். எதிர்பாலினக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கத் தொடங்கியிருந்தாலும் அல்லது உண்மையாகவே அன்பு ஏற்பட்டு காதலிக்கத் தொடங்கியிருந்தாலும் வளரிளம் பருவம் என்பதால் மனத்தின் வேகம் அதிகம். அதனால் காதலில் வேகம் காட்டுபவர்களும் அதிகம். இந்த வேகம் அந்த காதலிக்கும் இணையர்களில் ஒருவரிடம் சற்றுக் குறைந்தாலும் அங்கு பிளவும், விரிசலும் ஏற்பட்டு பிரேக் அப் உண்டாகிறது. காதலன் காதலியையோ அல்லது காதலி காதலனையோ துல்லியமாக புரிந்துகொள்ளாமல் தங்களுக்குள் பிரிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பிரிவு, அவர்களை உளவியல் ரீதியாக சோர்வடையச் செய்து, அதனை அவர்களின் நாளாந்த செயல்பாட்டில் எதிரொலிக்க செய்துவிடுகிறது. இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களும் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் சில காதலர்கள் அல்லது சில காதலிகள் காதலில் பிரேக் அப் நடைபெற்ற பிறகு உண்மையாக வருந்துவார்கள். அவனோ அல்லது அவளோ பிரிந்த பிறகு அவனையோ அல்லது அவளையோ நினைத்துக் கொண்டே இருந்து எப்படியாவது மீண்டும் ஒன்றிணைந்துவிட மாட்டோமா..! என எண்ணுவார்கள். இவர்களின் நல்லெண்ணத்திற்காக அதாவது அசலான காதலுக்காக சோதிடம் பிரத்யேகமான பரிகாரத்தை முன்மொழிகிறது.
நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளபோகிறீர்களா? இல்லையா? என்பதை உங்களது ஜாதகமே சொல்லிவிடும். உங்களது ஜாதகத்தில் ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிடத்தில் எந்த கிரகம் இருக்கிறது என்பதைப் பொறுத்து உங்களின் காதலைச் சொல்லிவிடலாம். உங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்தாலோ அல்லது செவ்வாய் பகவானோடு சுக்ரன், ராகு, கேது போன்றவர்கள் இருந்தாலோ உங்களது காதலை நீங்களே பிரேக் அப் செய்து கொள்ளும் சூழல் ஏற்படலாம்.
காதலை உண்டாக்குவது சந்திர பகவான் என்றால், அந்த காதலை திருமணம் வரை கடத்திக் கொண்டு போய், திருமணம் செய்து கொண்டு, இல்லறத்திற்கு எடுத்துச் செல்பவர் சுக்ர பகவான். அதனால் காதலர்கள் இந்த இரண்டு கிரகங்களையும் வணங்கவேண்டும். குறிப்பாக பிரேக் அப் ஆன காதலனோ அல்லது காதலியோ தங்களின் தவறுகளை உணர்ந்து, அதற்காக வருந்தி, திருத்திக்கொள்ளவேண்டும் என நிஜமாக நினைத்தால்... திங்கள் கிழமைகளில் காலை ஆறு மணி தியாலத்திலிருந்து ஏழு மணித் தியலாத்திற்குள்ளாக அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும். காதலர்கள் ஜோடியாக சேர்ந்து சென்றால்.. நான்கு தீபங்களை ஏற்றி அங்கு ஒரு மணித்தியாலம் வரை இருந்து வழிபட்டால்.. உங்களுக்குள் ஏற்பட்ட கருத்தியல் பேதம் தீர்ந்து இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கி, காதலை புதுபித்துக் கொள்வீர்.
எம்மில் சிலர், ‘நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எங்களுக்குள் தற்போது விரிசல் உண்டாகி, விவகாரத்து வரை செல்லத் தொடங்கியிருக்கிறது’ என்பர். இவர்களுக்கான பரிகாரத்தையும் சோதிடம் முன்மொழிந்திருக்கிறது. இவர்கள் அவர்களின் இல்லத்திற்கு அருகேயிருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள நவகிரங்களில் சுக்ர பகவானுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும். ‘எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. என்ன கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும்... மணமுறிவு ஏற்படக்கூடாது என நினைத்தால்.. ’மேற்சொன்ன பரிகாரங்களை கணவன் மனைவி என இருவருமே சேர்ந்து நான்கு நெய் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும். அத்துடன் அந்த ஆலயத்திற்கு ஒரு மணித்தியாலம் வரை அமர்ந்திக்கலாம் அல்லது தியானிக்கலாம். இதன் போது உங்களுக்குள் மாற்றம் ஏற்பட்டு அதாவது பிரச்சனைகளை வரிசையாக பட்டியலிட்டு, பிரச்சினையின் மூல காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் உண்டாகி, அதனை தீர்ப்பதற்கான வழிமுறையும் கிடைக்கும். அதன் பிறகு கணவன் மனைவி என இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, காதலைப் புதுபித்துக் கொண்டு வாழத் தொடங்குவீர்.
தொகுப்பு சுபயோகதாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM