தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான தமன் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ்குமார் வெளியிட்டிருக்கிறார்.
‘கண்மணி பாப்பா’ படத்தை இயக்கிய இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு நொடி’. இதில் தமன் குமார், எம். எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா சங்கர், ஸ்ரீரஞ்சினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய படநிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே. ஜி. ரதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரும், திரை ஆர்வலரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் வழங்குகிறார்
இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனாக தமன்குமாரின் கதாப்பாத்திரத் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM