பொரளை பகுதியில் பல்கலைக்கழக மாணவ குழுக்கள் இரண்டிற்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த ராஜகருணா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

குறித்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு பொரளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.