பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்கு கீழ் பெண்கள் மும்முனை ரி20 கிரிக்கெட்டில் இலங்கை சம்பியனானது

03 Feb, 2024 | 10:02 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மும்முனை ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் பெண்கள் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 36 ஓட்டங்களால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை  பெண்கள் அணி  வெற்றிகொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

தெவ்மி விஹங்காவின் சகலதுறை ஆட்டம்,  நெத்மி   சேனாரத்ன குவித்த அரைச் சதம், யசன்தி நிமன்திகா, ரிஷ்னி சஞ்சனா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பெண்கள் அணி 20 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைக் குவித்தது.

நெத்மி சேனாரத்ன, தெவ்மி விஹங்கா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த தெவ்மி விஹங்கா 42 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து விஷ்மி ராஜபக்ஷ 14 ஓட்டங்களுடனும் மனுதி  நாணயக்கார 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெத்மி சேனாரத்ன 57 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்  பெண்கள் அணி   20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரபேயா கான் 31 ஓட்டங்களையும் அர்வின் தானி 15 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் தெவ்மி விஹங்கா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யசன்தி நிமன்திகா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷ்மி சஞ்சனா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் பெண்கள் அணியும் பங்குபற்றிய இந்த மும்முனை பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றில் பங்களாதேஷிடம் 2 தடவைகள் இலங்கை தோல்வி அடைந்தது. பாகிஸ்தானுடனான ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டது. மற்றைய போட்டியில் பாகிஸ்தானை 31 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.

சம்பியனான இலங்கை யுவதிகள் அணிக்கு மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி வீராங்கனை மனுதி நாணயக்கார தலைவியாகவும் மாத்தறை அனுர வித்தியாலய வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தி உதவித் தலைவியாகவும் செயற்பட்டனர்.

இந்த சுற்றுப் போட்டியில் 4 இன்னிங்ஸ்களில் நெத்மி சேனாரத்ன மொத்தமாக 132 ஓட்டங்களையும் தெவ்மி விஹங்கா 130 ஓட்டங்களையும் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகித்தனர்.

ஆட்டநாயகி: தெவ்மி விஹங்கா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26