தயாரிப்பு : மாருதி பிலிம்ஸ் & ஹெச் பிக்சர்ஸ்
நடிகர்கள் : விதார்த், பூர்ணா, சுபஸ்ரீராயகுரு, திருகுன் மற்றும் பலர்
இயக்கம் : ஆதித்யா
மதிப்பீடு : 2.5 /5
‘சவரக்கத்தி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் ‘டெவில்’. திருமணமான தம்பதிகளிடையேயான திருமணம் கடந்த உறவை மையப்படுத்தி திரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படம் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
விதார்த் சென்னை மாநகரில் பணியாற்றும் பிரபலமான சட்டத்தரணி. அவருக்கு பெற்றோர்கள் பூர்ணாவை பெண் பார்த்து, நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவு நடைபெறும் தருணத்தில், தொலைபேசி அழைப்பு வர விதார்த் உடனடியாக விரைந்து செல்கிறார். அதன் பிறகு தான் அவருடன் அலுவலகத்தில் உதவிளராக பணியாற்றும் பெண்ணுடன் உடல் ரீதியிலான உறவு இருக்கிறது என்பது தெரியவருகிறது. இதனை ஒரு முறை மனைவியான பூர்ணா நேரில் பார்த்துவிடுகிறார். தன்னுடைய கணவன் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக உணர்கிறார்.
இந்த அதிர்ச்சியான காலகட்டத்தில் காரில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக அழகான இளைஞன் ஒருவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறார். அந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவர் விபத்தின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவி புரிகிறார். இதனால் இவர்களுக்கு இடையே நெருக்கம் உண்டாகிறது. சில தருணங்களில் தான் மற்றொருவரின் மனைவி என்பதையும், தனக்கு கணவன் துரோகம் இழைத்துவிட்டாரே என்பதையும் நினைத்து அவருடன் நெருக்கமாகும் தருணத்தின்போது, கணவன் விதார்த், தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளரின் பித்தலாட்ட உறவை கண்டுபிடித்து, தன் மனைவி பூர்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அவருடனான உறவை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறான்.
பூர்ணாவும் தன் கணவனான விதார்த்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த இளைஞன் பூர்ணாவுடனான உறவை தொடரவிரும்புகிறார். இது விதார்த்திற்கு ஒரு கட்டதில் தெரியவருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் ‘டெவில்’ படத்தின் கதை.
கணவன் -மனைவி என இருவருக்கிடையேயான திருமண உறவைக் குறித்து பேசும் முதிர்ச்சியான கதை என்றாலும், இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு திரில்லர் அனுபவங்களை வழங்குகிறது. பூர்ணா- விதார்த்- திருகுன் -சுபஸ்ரீ என அனைவரும் தங்களின் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பூர்ணா -திருகுன் இடையேயான உறவை வசனங்கள் மூலம் விவரித்திருப்பதை விட, காட்சிகள் மூலம் விவரித்திருந்தால் இயக்குநரின் திறமையை பாராட்டியிருக்கலாம்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி சற்று நிறைவை அளிக்கிறது. கற்றுக்கொண்ட இசையையெல்லாம் அளித்து, சில இடங்களில் திணித்து, இசையமைப்பாளராக தன்னை முனனிலைப்படுத்திக்கொள்கிறார் அறிமுக இசையமைப்பாளரான மிஷ்கின்.
லிவிங் டுகெதர், கம்பானியன், பேக்அப் பெஸ்டி.. என கலாசாரம் மாறிக்கொண்டிருக்கும் போது, கணவன் -மனைவி இடையேயான திருமணம் குறித்த உறவை பேசியிருப்பதற்கு ஒரு தரப்பு இளம் தலைமுறை பெண்களிடத்தில் வரவேற்பு இருக்காது. இயக்குநர் ஆதித்யா தவறு செய்த கணவன், திருந்தி மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால், அவர்களை பூரணமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லியிருப்பதும் இது ஆணாதிக்க பார்வை என்பதும் நெருடல்.
ஒளிப்பதிவு, பாடல்கள், படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநருக்கு பக்கபலமாக பணியாற்றியிருக்கிறார்கள்.
டெவில் - அரைகுறையான திகில்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM