உயர்தரப் பரீட்சையின் விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு அம்பாறை பிரதான நீதிவான் திருமதி நவோமி விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சரீரப் பிணை வழங்குபவர்களில் ஒருவர் சந்தேக நபர்களின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் அது உறுதிமொழி மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் பிணை இரத்துச் செய்யப்படும் என்றும் உத்தரவிட்ட நீதிவான் வழக்கு விசாரணை மே 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM