மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட 'ஆரோக்கியா பாலகம்' எனும் பெயரிலான பசும்பால் மற்றும் பால்சார் உற்பத்திகளின் விற்பனை நிலையம் நேற்று வியாழக்கிழமை (01) உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் திறந்துவைத்தார்.
கொம்மாதுறை கால்நடை அபிவிருத்தி, பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் முன்னெடுத்த இந்த விற்பனை நிலையத்தின் திறப்பு விழா பல்கலைக்கழக பதிவாளர் அ.பகிரதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் த.மதிவேந்தன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், பல்கலைக்கழக நிதியாளர் எம்.எம்.பாரிஸ், மாணவர் விவகாரங்கள் திணைக்கள சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடத்தில் தூய பசும்பால் மற்றும் பால் உற்பத்திகளின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM