வேமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பஸ்ஸில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அமிதிரிகல எலுவன்தெனிய நடுவத்த பகுதியில் பதிவாகியுள்ளது.

 யக்கல, இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

குறித்த இளைஞர், தான் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை வீடியோவாக பதிவு செய்யுமாறு நண்பனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த போது முன்னாள் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இக்காட்சிகள் நண்பனின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.