துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார். இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மேலும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM