(நெவில் அன்தனி)
இலங்கையுடன் முதல்தடவையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தமது அணிக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாகவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைத்தால் தங்களால் சாதிக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்களிடம் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிடி கூறினார்.
மேலும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எமது நாட்டு மக்கள் சகல விடயங்களிலும் திடசாலிகள் என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். அதேபோன்று கிரிக்கெட் வீரர்களும் விளையாட்டில் திடமனதுடன் விளையாடி வருகின்றனர்.
நாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வருவது போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிக்க துடிக்கிறோம்.
எங்களது நாட்டில் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி கட்டமைப்பு இருக்கிறது. அப் போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமைகளின் அடிப்படையிலேயே வீரர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆனால், நாங்கள் 7 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே இதுவரை விளையாடியுள்ளோம்.
எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைத்தால் நாங்கள் நிறைய கற்றுக்கோள்வோம். அதன் மூலம் எங்களால் சாதிக்க முடியும். இங்கு நாங்கள் வெற்றிபெறவே வருகை தந்துள்ளோம். எனவே சகலவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு விளையாடவுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் பிரதான சுழல்பந்துவிச்சாளர் ராஷித் கானின் முதுகுப் பகுதியில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் ஓய்வு பெற்று வருவதால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்குபற்றவில்லை.
'ராஷித் கான் அணியில் இடம்பெறாதது அணித் தலைவர் என்ற வகையில் எனக்கு பெரும் குறையாக இருக்கிறது. அவர் சாதிக்கக்கூடிய ஒரு வீரர் என்பதை சகலரும் அறிவர்.
அவரது இடத்தை நிரப்பவது மிகவும் கடினமானது. எனினும் எமது அணியில் இடம்பெறும் ஏனைய சுழல்பந்துவீச்சாளர்கள் அந்தக் குறையை நீக்குவார்கள் என நம்புகிறேன்' ஹஷ்மதுல்லா ஷஹிடி கூறினார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் பிரவேசம் செய்த ஆப்கானிஸ்தான் கடந்த வருடம் வரை விளையடிய 7 டெஸ்ட் பொட்டிகளில் 3இல் வெற்றிபெற்றுள்ளது.
அயர்லாந்து, பங்களாதேஷ், ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டுள்ளது. இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மற்றைய 4 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது.
இலங்கையுடன் ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அதனைத் தொடர்ந்து கண்டியில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் தம்புள்ளையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரிலும் விளையாடும்.
ஆப்கானிஸ்தான் குழாம்: ஹஸ்மதுல்லா ஷஹிடி (தலைவர்), இப்ராஹிம் சத்ரான், அப்துல் மாலிக், இக்ரம் அலிகில் (விக்கெட் காப்பாளர்), பாஹிர் ஷா, மொஹமத் இஷாக் (விக்கெட் காப்பாளர்), நசிர் ஜமால், ரஹ்மத் ஷா, ஸியா உர் ரஹ்மான், மொஹமத் சலீம், நிஜாத் மசூத், காய்ஸ் அஹ்மத், யாமின் அஹ்மத்ஸாய், ஸஹிர் கான், நவீத் ஸத்ரான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM