இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கையை விளையாட்டு அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

இந் நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்தார்.