2024 பெப்ரவரி மாத ராசி பலன்கள் 

01 Feb, 2024 | 05:39 PM
image

மேஷம்

விருப்பங்களை உடனே நிறைவேற்ற நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசியில் குரு அமர்ந்து பார்க்கும் இடங்களில் நல்ல பலன்களை தருவதுடன், லாபஸ்தானத்தில் சனி நின்று ராசியை பார்ப்பதால், கால சுழற்சியில் ஏற்படும் பல சோதனைகள் உங்களை பாதிக்காமல் உதவும் வகையில் தொழிலிலும், உத்தியோகத்திலும் நற்பலன் அடைவீர்கள். 

சரியான நிலைப்பாடுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். எதையும் சில நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளை யோசித்து செயல்படுவது நன்மையை தரும். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை சீராகும்.

சந்திராஷ்டம நாட்கள் : 03-02-2024 சனி இரவு 09.30 முதல் 06-02-2024 செவ்வாய் அதிகாலை 04.15 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள் : ஒரெஞ்ச், மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, வெள்ளை நிற பூ வைத்து, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

ரிஷபம்

புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்ப்பதும், வெளிநாடு செல்லும் வாய்ப்பையும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணி செய்யும் சூழ்நிலையும் உருவாகும். 

எதையும் முன் கூட்டியே யோசித்து செயற்படும் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். அடிக்கடி செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள், வெளியூர் சென்று வருதல் அமையும். 

உத்தியோகத்திலும், பணியிலும் சிலருக்கு இடமாற்றம் செய்ய வேண்டி வரும். திறமைகளுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். சிறந்த கதை ஆசிரியர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 06-02-2024 செவ்வாய் அதிகாலை 04.16 முதல் 08-02-2024 வியாழன் காலை 08.42 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை வழிபட்டு இலுப்பெண்ணெய் தீபமிட்டு, சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள, தடைப்பட்ட சகல காரியமும் வெற்றியைத் தரும்.

மிதுனம்

வெற்றிப் பாதையில் விரைந்து செயல்பட துடிக்கும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்தும் ராசிநாதன் பார்வை ராசிக்கு அமைவதும் உங்களின் தொழிலிலும், பணியிலும் வளம் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். 

திட்டமிட்டபடி அனைத்து காரியங்களையும் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வாழ்க்கைக்கு வெற்றியைத் தேடித் தரும். 

அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் ஈடுபாடுகள் நல்ல பலனைத் தரும். லாபாதிபதியின் பார்வையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள் எளிதில் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை விரைவில் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 08-02-2024 வியாழன் காலை 08.43 முதல் 10-02-2024 சனி பகல் 01.42 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, பச்சை நிற பட்டாடை உடுத்தி நெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் அனுகூலமாகும்.

கடகம்

வெளிப்படையாக எதையும் பேசி செயற்பட்டு வரும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்கள் ராசிக்கு தனகாரகன் பார்வை பெறுவதும், ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து மேன்மை அடைவதும், தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வையிடுவதும் நிறைவான தொழில் வளர்ச்சியையும், சுய ஜாதகத்தில் சனி ஆறு, பனிரெண்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொருளாதார வளர்ச்சியையும் கொடுக்கும். 

மிதமான வளர்ச்சியாக இருந்தாலும், உங்களின் சிறப்பான செயற்பாடுகள் மூலம் தக்கவைத்துக் கொள்வீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கும் ஆதரவாளர்களின் போக்கும் சரி செய்ய வேண்டி வரும். உங்களை எதிர்த்து வந்தவர்கள் இம்மாதம் கொஞ்சம் அடங்கி இருப்பார்கள். சோதனைகளை சாதனைகளாக்கிக் காட்டுவீர்கள். சிக்கல்கள் தானே விலகும்.

சந்திராஷ்டம நாட்கள்: 10-02-2024 சனி பகல் 01.43 முதல் 12-02-2024 திங்கள் பகல் 02.03 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பலநிறம், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரகங்களுக்கு மூன்று விளக்கு போட்டு, மிளகு பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்கி வர, சகல காரியமும் நன்மையாக அமையும். தடை நீங்கி, லாபம் கிட்டும்.

சிம்மம்

வெற்றிப் பாதையில் விரைந்து முன்னேற விரும்பும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும், சனி பார்வையும் பெறுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால பலன்களை எண்ணி யோசிக்காமல் நிகழ்காலத்தில் செயல்பட வேண்டிய பணிகளை விரைந்து செய்வீர்கள். 

அரசியலிலும், பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு சிறப்பாக அமையும். மறைமுக எதிரிகள் உங்களிடம் நட்பு கொண்டு விளங்குவார்கள். 

லாபாதிபதி புதனின் பார்வை லாபஸ்தானத்தில் அமைவதால் நன்மையும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். கலைத்துறையில் நினைத்தபடி செயற்பட்டு சிறந்த ஏற்றம் பெறுவீர்கள். இரண்டாமிடத்தில் விரயாதிபதியுடன் கேது இணைவது மேல் படிப்பு செல்பவர்களுக்கு ஏற்றம் பெறும்.

சந்திராஷ்டம நாட்கள்: 12-02-2024 திங்கள் பகல் 02.04 முதல் 14-02-2024 புதன் மாலை 04.41 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் நாக தேவதையை வணங்கி வேப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள வெற்றி கிட்டும்.

கன்னி

கால சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதும், குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வதும், பொருளாதாரத்தில் சில சிக்கல் உண்டானாலும்.. உங்களின் செயல்களாலும், எதிர்பார்ப்புகளாலும் உங்களின் வருமானத்தை தீர்வு செய்துகொள்வீர்கள். 

போட்டிகளில் எதையும் சந்தித்து திறமையை வெளிக்காட்டுவீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் செயற்பட தொடங்கும். ஆறாமிட சனி உங்களுக்கு யோகத்தை தருவதும், உடல் நலனின் சிலருக்கு இருந்து வந்த வருத்தம் நீங்கி மேன்மையை பெறுவம் வாய்ப்பு அமையும். 

அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். ஆராய்ச்சிகளில் புதிய யுக்தியை கையாண்டு மேன்மை பெறுவீர்கள். கலைதுறையில் பாடல், எடிட்டிங், வசனகர்த்தாக்கள் பாராட்டும், பரிசும் பெறுவீர்கள். ஆசிரியர் பணி சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 14-02-2024 புதன் மாலை 04.42 முதல் 16-02-2024 வெள்ளி இரவு 08.26 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் வைரவரையும், வியாழக்கிழமைகளில் நவகிரக குருவையும் தீபமேற்றி வணங்கினால் உங்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.

துலாம்

விரும்பிய வாழ்க்கைக்கு தேவையான விடயத்தை செயல்படுத்தும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதும், ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதும், உங்களின் தனி திறமைகளை செயல்படுத்தி மேன்மை அடையச் செய்யும். விளையாட்டுத்துறையில் போட்டிகளில் பங்குபற்றி வெல்வீர்கள். 

முதலீடு இல்லாத தொழிலில் ஆதாயம் கிட்டும். குறித்த காலத்தில் உங்களின் காரியங்களில் தடையின்றி முடித்து விடுவீர்கள். பொது வாழ்வில் உங்களின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 

அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். நினைத்தபடி காரியத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். பஞ்சமாதிபதி சனி உங்களின் தனஸ்தானத்தை பார்ப்பது தேவைகளுக்கு ஏற்ப பண உதவிகளை பெற்று தரும். எதிர்காலம் சிறப்பான முன்னேற்றம் தரும். கலைதுறையினரின் கலை நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: 16-02-2024 வெள்ளி 08.27 இரவு முதல் 18-02-2024 ஞாயிறு இரவு 02.06 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை முருகனையும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் தொடர்ந்து செய்து வர, உங்களின் சகல காரியமும் வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

விடாமுயற்சியும் பிடிவாதப் போக்கையும் கொண்டிருக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார நிலையில் வளம் பெறுவீர்கள். 

தன ஸ்தானத்தில் ராசிநாதனுடன் லாபாதிபதி இணைவு பெறும், விரயாதிபதி சுக்கிரன் இவர்களுடன் சேர்வதாலும் தொழிலில் உங்களின் உழைப்பு சிறப்பாக அமையும். 

சிலருக்கு உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளிலும், தொழில் சார்ந்த தொடர்புகளும் உங்களுக்கு உண்டாகும். 

உங்களின் புத்திரருக்கு திருமண முயற்சிகள் நன்மை தரும். தாயார் உடல் நலனில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி வரும். கலைதுறையினருக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும். சிறு சிறு தடைகள் தாண்டி வருவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 18-02-2024 ஞாயிறு இரவு 02.07 முதல் 21-02-2024 புதன் காலை 10.15 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், பச்சை, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமையில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெயை தீபமும் ஏற்றி வேண்டிக்கொள்ள தடைகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.

தனுசு

விடாமுயற்சிகளின் மூலம் எதையும் சாதிக்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், சனி முயற்சி ஸ்தானத்தில் அமர்வதும் நன்மை‍யே. உங்களின் எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் நிலையை உருவாக்கிக்கொள்வீர்கள். 

உங்களின் ராசியில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் லாபாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் உங்களின் கூட்டு தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். 

சரியான நேரத்தில் எதையும் செய்து முடிப்பீர்கள். அரசியலில் நன்மதிப்பு உண்டாகும். உங்களின் திறமை வெளிபடும். தொழிலில் முன்னேற்றமும். பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். கலைதுறையினர் சிறப்பான நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். எதிர்காலம் சிறக்க உங்களுக்கு பலர் வந்து உதவி செய்வார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 21-02-2024 புதன் காலை 10.16 முதல் 23-02-2024 வெள்ளி இரவு 08.41 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு ராகு - கேதுவுக்கு அரளி பூ மாலை போட்டு இரு தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் நன்மை கிட்டும். பொருளாதாரம் மேன்மை பெறும்.

மகரம்

புத்துணர்வுடன் செயல்களை செய்யும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்வதும், முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்வதும் எடுத்த காரியங்களில் திறம்பட செய்விக்கும். அரசியலிலும், பொது வாழ்விலும் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள். எதையும் காரியவாதியை போல் செயல்பட்டு உங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வீர்கள். 

சுமையாக இருந்த வந்த காரியங்களை சீர் செய்து வளம் பெறச் செய்வீர்கள். எதிலும் பாதிப்பை எதிர்கொண்டு செயல்பட்டு வெல்வீர்கள். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். முன்யோசனை மூலம் நல்ல தீர்வினை ஏற்படுத்திக்கொள்வீர்கள். அமைதியாக செயற்பட்டு உங்களுக்கு தேவையான விடயங்களில் முழு கவனம் செலுத்தி பயன் பெறுவீர்கள். தொழிலில் படிப்படியாக முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 23-02-2024 வெள்ளி இரவு 08.42 முதல் 26-02-2024 திங்கள் காலை 08.19 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வெற்றிலை மாலை போட்டு நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும்.

கும்பம்

விரும்பியதை அடைய தெளிவாக செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசியில் ராசிநாதன்  அமர்ந்திருப்பதும், மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதும் நீங்கள் எடுக்கும் அனைத்துவித காரியங்களை வளம் பெற செய்யும். தன ஸ்தானத்தில் ராகு அமர்ந்து தொழில், உத்தியோகம், பொருளாதாரத்தை வளம் பெறச் செய்வார். 

உங்களின் வளர்ச்சிப் பணிகளில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி மேன்மை அடைவீர்கள். புதிய நல்ல திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். காரியத்தில் குதிரை வேகத்தில் சென்று செயற்பாடுகளை துரிதப்படுத்துவீர்கள். 

அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். அதிகார பலம் உங்களுக்கு கிட்டும். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலருக்கு கலைத்துறையில் முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் உண்டாகும். சகோதரர் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். எதிலும் கவனமுடன் செயற்பட்டு வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 26-02-2024 திங்கள் காலை 08.20 முதல் 28-02-2024 புதன் இரவு 07.34 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை வைரவருக்கு, ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து தடைகளும் நீங்கி மேன்மை அடைவீர்கள்.

மீனம்

காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செயற்படும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்ப்பதால், உங்களின் பல நாட்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு அமையும். 

கடவுள் நம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்து வருவீர்கள். ராசியில் ராகு வந்து அமர்வதால் சில நேரம் மறதி உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பெறுவது பல தொழிலில் முதலீடு செய்து பயன் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

அறிவியல் சார்ந்த துறையிலும் இசைக்கலையிலும் சிறந்து விளங்கி மேன்மை அடைவீர்கள். கோவில் திருவிழாக்களில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பாதியில் நின்ற காரியம் செயற்பட தொடங்கும். அரசியலில் சுய விருப்பமின்றி செயற்படுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 01-02-2024 வியாழன் பகல் 12.18 முதல் 03-02-2024 சனி இரவு 09.29 மணி வரையும்.

28-02-2024 புதன் இரவு 07.35 முதல் 02-03-2024 அதிகாலை 05.02 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் வைரவருக்கு ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் மூன்று மட்டும் ஏற்றி.. வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.

(கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான எளிய பரிகாரம்..!

2024-05-11 17:13:12
news-image

காரிய சித்தியை அள்ளித்தரும் முருகன் வழிபாடு!

2024-05-11 13:08:41