சதீஷ் நடிக்கும் ‘வித்தைக்காரன்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

01 Feb, 2024 | 04:58 PM
image

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுனாமிகா...’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

வெங்கி இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'வித்தைக்காரன்’. இதில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜோன் விஜய், மதுசூதன் ராவ், சுப்ரமணிய சிவா, பவல் நவகீதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு விபிஆர் இசையமைத்திருக்கிறார். மேஜிஸியன் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வைட் கொர்பெட் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘சுனாமிகா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. 

இந்த பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுத, பின்னணி பாடகர் ஹரிஹரன் பாடியிருக்கிறார்.  காதலும் மெல்லிசையும் கலந்த இந்த பாடல் இணையத் தலைமுறையினரை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் சென்னை - திரைப்பட விமர்சனம்

2024-12-13 17:39:31
news-image

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன்...

2024-12-13 17:39:50
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள்...

2024-12-13 17:40:04
news-image

விவசாயிகளின் அவல நிலையை உரக்கப் பேசும்...

2024-12-13 17:37:27
news-image

சென்னையில் தொடங்கிய 22 ஆவது சென்னை...

2024-12-13 17:03:25
news-image

மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்' திரைப்படத்தின்...

2024-12-13 16:54:00
news-image

கோலாகலமாக நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின்...

2024-12-13 17:36:38
news-image

“புஷ்பா 2” பட வெளியீட்டில் கூட்டத்தில்...

2024-12-13 17:11:43
news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42