அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில், அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன் நடிப்பில் வெளிவந்த 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம், ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.
இதைத்தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் வெற்றியை விழாவாக கொண்டாடினர். இதில் படக்குழுவினருடன் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா ரஞ்சித் பங்கு பற்றினார்.
இதன் போது பா. ரஞ்சித் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனுமளவிற்கு தணிக்கை குழுவில் மாற்று கருத்துடையவர்கள் இருந்தனர்.
பல்வேறு காரணங்களைக் கூறி நெருக்கடி அளித்தனர். இதனால் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தோம். அங்கும் மாற்றங்களை செய்யுமாறு கூறினர். அதன் பிறகு தான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
ஒற்றுமையை வலியுறுத்தி.. அனைவரும் ஒன்றாக இருக்கச் சொல்கிறது இந்த திரைப்படம். இந்த சூழலில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி, மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
என் பிரச்சினை இன்னும் தீரவில்லை. அதனால் பேசித்தான் ஆகவேண்டும். மக்களைத் தொடர்பு படுத்தாமல்..அதை கலையாக மாற்றாமல்.. இங்கே நின்றுகொண்டிருக்க முடியாது.
மக்கள் விரும்பும் மொழியில் சொல்கிறோம். இந்த திரைப்படத்தின் வெற்றி பலருக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. அந்த நம்பிக்கை சமூகத்தில் முடிந்த அளவுக்கு மாற்றத்தை உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம்.'' என்றார்.
இதைத் தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி, படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM