நடிகர் மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

01 Feb, 2024 | 04:12 PM
image

இயக்குநரும், நடிகருமான ஆர். மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டெஸ்ட்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் எஸ். சஷிகாந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டெஸ்ட்'. இதில் ஆர். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுமன் குமார் எழுதிய இந்த கதைக்கு விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்ய சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார்.

ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சக்கரவர்த்தி ராமசந்திரா மற்றும் சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது என படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த காணொளியில் இடம் பெறும் காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் துடுப்பாட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right