இன்றைய திகதியில் எம்முடைய இளம் தம்பதியினர் கடந்த தலைமுறையினரைப் போல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. திருமணமான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதையே தம்பதிகள் தீர்மானிக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் தாம்பத்யஉறவு என்பது இயல்பாகவேயிருக்கிறது. சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் அவர்கள் தங்களது வயிற்றில் உருவாகும் சிசுவை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கலைத்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும்.. அது இந்த பிறவியில் அவர்கள் செய்த பாவச் செயலாகவே கருதப்படுகிறது. அதனால் அவர்களுக்கு தோஷம் உண்டாகிறது.
நினைத்த காரியத்தில் தடை ஏற்படுவது.. வளமையாக வந்துகொண்டிருந்த வருவாயில் தடை உண்டாவது.. என எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டு மனத்தை அலைகழிக்கும். உடனே இதற்கு எம்மில் சிலர் பரிகாரங்கள் இல்லையா? என கேட்பர். எம்முடைய சோதிட நிபுணர்கள் இதற்கும் பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
அதற்கு முன் கடன் தொல்லைலையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பிரத்யகே பரிகாரத்தையும், நாளாந்தம் குளிக்கும் போது தோஷம் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறையையும், எம்முடைய குடும்பம் மென்மேலும் வளர்வதற்கான பிரத்யேக பரிகாரத்தையும் காணலாம்.
கடன் பிரச்சினை தீர கோழியை கூண்டில் அடைத்து வைத்தால்..கடன் தீரும். அதற்கு சிவப்பு அரிசியை உணவாக அளித்தால் கடன் பிரச்சினை தீரும். இதைத்தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.
நீங்கள் நீராட குளியலறைக்கு சென்றால்.. உங்களுடைய பாத்திரத்தில் இருக்கும் அனைத்து நீரையும் பாவிக்க வேண்டும். நீரை மீதம் வைக்காமல் இருக்க வேண்டும். மீதம் வைத்தால் அது தோஷமாகும்.
செம்பு கலசம் ஒன்றை வாங்கி அதன் மீது வாழைப்பூ ஒன்றை வைத்து விடவும். அதைச் சுற்றி பதினொரு வெற்றிலையை வைத்து விடுங்கள். அதற்கு முன் அந்த கலசத்தில் ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு தங்க காசு, ஒரு வெள்ளி காசு, பச்சை கற்பூரம், போதுமான அளவிற்கு தண்ணீர் ஆகியவை இடவேண்டும்.
வாரம் ஒரு முறை இவை அனைத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். இதைத்தொடர்ந்து செய்தால்.. வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தொடரும்.
கருக்கலைப்பு செய்திருந்தால்.. அதற்கு. அரசாங்க அனுசரனையுடன் இயங்கும் வைத்தியசாலையில் தங்கி பிரசவம் பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டு நாட்கள் சேவைகள் செய்யவேண்டும். அல்லது உங்களுடைய வீட்டிற்கருகில் ப்ளே ஸ்கூல் எனப்படும் சிறிய குழந்தைகள் படிக்கும் பாலர் பாடசாலையில் தங்கி, அங்கு கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு இரண்டு நாட்கள் சேவைகள் செய்ய வேண்டும்.
இதனை கருகலைப்பினால் ஏற்பட்ட தோஷம் துரவேண்டும் என மனமுருகி செய்தால்.. உங்களது தோஷம் குறைந்து, மீண்டும் பழைய உற்சாகம் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.
தகவல் : பிரகாஷ்
தொகுப்பு : சுபயோகதாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM