இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களது ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதில்லை. ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால்.. அதற்குரிய சிறப்பு வைத்திய நிபுணர்களைச் சந்தித்து, ஆலோசனையும், சிகிச்சையும் பெற்று நிவாரணம் பெறுகிறார்கள்.
இந்நிலையில் எம்மில் சிலருக்கு அனைத்து வித சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகும் அவர்களது ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகவேயிருக்கும்.
தொடர்ந்து துன்பத்தை சந்திக்கவேண்டியதிருக்கும். இவர்கள் சோதிட நிபுணர்களை கலந்து ஆலோசித்து, இதற்கான பிரத்யேக பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக இதயம் தொடர்பான நோய், குருதி அழுத்த பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புளால் சொல்ல இயலாத அசௌகரியத்தை அனுபவித்து வருபவர்கள் இத்தலத்திற்கு விஜயம் செய்து, அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை தரிசித்தால் நன்மை பயன்கும்.
சென்னைக்கு அருகேயுள்ள திருக்கழுகுன்றம் எனும் ஊரில் மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள சிவபெருமானை முறைப்படி விரதமிருந்து வணங்கவேண்டும்.
பிரதோஷ தினத்தன்று ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை தரிசிக்கவேண்டும். அதற்கு முன் நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
இந்த பழிபாட்டை பதினொரு பிரதோஷங்கள் தொடர்ந்து மேற்கொண்டால்.. உங்களது ஆரோர்க்கியம் மேம்படுவதை அனுபவத்தில் உணரலாம். இங்குள்ள மக்கள் இதனை ஈஸ்வரன் கோயில் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
1,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்திற்கு வருகைத்தந்து, சுயம்பு மூர்த்தியான ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை தரிசித்து, ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதையும் கழிக்கலாம்.
இங்கு கிரிவலப்பாதை உண்டு என்று கூறுவோர்களும் உண்டு. அதனை கண்டறிந்து, கிரிவலம் வந்து வழிபட்டாலும் ஆரோக்கியம் மேம்படும்.
தொகுப்பு சுபயோகதாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM