சுயாதீன இசைக்கலைஞர்கள், சுயாதீன படைப்பாளிகள் ஆகியோரர்களின் திறமைகளை வெளிப்படுத்த நடிகர் ஜீவா ‘டெஃப் ப்ராக்ஸ்’ என வணிகரீதியிலான நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இதற்கான தொடக்கவிழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களுடன் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், விஜய் அண்டனி, இயக்குநர் மோகன் ஜி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் என பல பிரபலங்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் நடிகர் ஜீவா பேசுகையில்,“ "கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை தற்போது வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக நாற்பதிற்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது போல.. இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வதையும் கேட்காமல்.. நமது வேலையை நாம் செய்து கொண்டே.. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெப்ஃ ஃப்ராக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.’ என்றார்.
இந்நிகழ்வில், கில்லா.கே எனும் இசைக்கலைஞரின் 'புரிய வை' எனும் சுயாதீன பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், 'பனிமேல் விழும் கனல் காற்று' என்ற குறும்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலும், பெண்கள் இணைந்து உருவாக்கிய ‘தி பொப்’ எனும் சுயாதீன பாடலை நடிகர் கார்த்தியும், சுயாதீன இசைகலைஞர் கென்னிஷா பாடிய 'இதை யார் சொல்வாரோ' எனும் பாடலை நடிகர் ஜெயம் ரவியும், ‘ஃபோக் அஜெண்டா’ எனும் ஆவணப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேசும், ‘ஒவ்வொரு பெண்ணுக்கும்’ எனும் சுயாதீன பாடலை விஜய் அண்டனியும், ‘ ஏக் லடுககா ஏக் லடுககி’ எனும் குறும்படத்தை நடிகர் மிர்ச்சி சிவாவும், ‘ஃபண்டாஸ்டிக்’ எனும் இணையத் தொடரை நடிகர்கள் கலையரசன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் வெளியிட்டனர்.
தமிழ் திரையுலகில் உருவாகும் இளம் படைப்பாளளிகள் மற்றும் சுயாதீன கலைஞர்களுக்கு பிரத்யேகமாக சர்வதேச அளவிலான தளம் அமைத்துக் கொடுத்திருக்கும் நடிகர் ஜீவாவின் முயற்சியை தமிழ் திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM