அரசாங்கத்துக்கு காலவகாசம் வழங்கியுள்ள அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம்

Published By: Vishnu

01 Feb, 2024 | 03:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேருந்து கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும். அரசாங்கத்துக்கு 15 நாட்கள் காலவகாசம் வழங்குவோம். கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் எமது பலத்தை காண்பிப்போம் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதால் பேருந்து கட்டணத்தை தீர்மானிப்பதில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

அப்போது அரசாங்கம் பேருந்து கட்டண கொள்கையை முன்னிலைப்படுத்தி எமது கோரிக்கையை புறக்கணிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் கட்டணம் உயர்வடைகிறது. ஆனால் பேருந்து கட்டணம் வருடத்துக்கு இருமுறை தான் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு மத்தியில் வற் வரி அதிகரிப்பினால் வாகன உதிரிபாகங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இம்முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எரிபொருள் செலவுக்கு அமைய கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் எம்மால் சேவையை தொடர முடியாது.

தற்போதைய எரிபொருள் விலைக்கு அமைய பேருந்து கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்.

குறைந்தப்பட்ச கட்டணம் 35 ரூபாவாக காணப்பட வேண்டும். கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்து 15 நாட்கள் காலவகாசம் வழங்குவோம்.

இம்முறையும் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் எமது பலத்தை காண்பிப்போம். எம்மால் இனியும் கட்டண திருத்த கொள்கை என்ற வரையறைக்குள் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54
news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

நெடுங்கேணியில் இணைந்து போட்டியிடுவோம் ; ஜனநாயக...

2025-02-10 17:40:02
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 17:30:36