ஹிக்கடுவ பகுதியில் விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு !

Published By: Nanthini

01 Feb, 2024 | 01:24 PM
image

ஹிக்கடுவ, வேவல பகுதியில் உள்ள விடுதியொன்றின் அறையில் இரத்தக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வறகொட, களனி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என கூறப்படுகிறது. 

குறித்த நபரிடமிருந்து எந்தவொரு தகவலும் கிடைக்காத காரணத்தினால் விடுதி நிர்வாகத்தினர் நேற்று புதன்கிழமை (31) மாலை ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, அந்த நபர் தங்கியிருந்த விடுதி அறையின் ஜன்னலை பொலிஸார் மற்றும் விடுதி ஊழியர்கள்  திறந்து பார்த்தபோது, அவர் இரத்த காயங்களுடன் உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.

தற்போது சடலம் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும்...

2026-04-22 19:48:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33