அண்மையில் அமுலுக்குவந்த தகவல் அறியும் உரிமையின் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உடமைகள் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதும், அது தோல்வியடைந்துள்ளதாக, இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ள போதும், அத் தகவல்களை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனலின் முகாமையாளர் சங்கீதா குணரத்ன வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் மீளவும் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், முதல் விண்ணப்பமானது 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 12 ஆவது உறுப்புரை ஏற்பாட்டிற்கமைய விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சபாநாயகரின் உத்தரவிற்கிணங்க தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை அளிப்பதற்கு இடமில்லை என அறிவித்துள்ளமையை தொடர்ந்தே தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தகவல்தரும் பிரதி செயலாளர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு, பிரதமர் நீண்ட காலம் முயற்சித்த நிலையில், கடந்த வருடம் அறிமுகப்படுத்தியமையும், தகவல் அறியும் உரிமை சட்டத் துவக்க நிகழ்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு, குறித்த சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டவற்றை சங்கீதா குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை பரிசீலிக்கும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டு விண்ணப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM